தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சாம்சங் நிறுவனம் உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
இந்நிறுவனத்தின் செமிகண்டக்டர் மற்றும் எல்இடி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 240 தொழிலாளர்கள், உடல்ரீதியாகப் பாதிப்புகளை எதிர்கொண்டனர். புற்றுநோய் போன்ற பெரிய நோய்களை எதிர்கொண்ட இந்தத் தொழிலாளர்களில் சிலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. இந்த பாதிப்பு அவர்களது குழந்தைகளுக்கும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், தங்களது தவறை ஒப்புக்கொண்ட அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது சாம்சங் நிறுவனம்.
தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பணியை முறையாகச் செய்யவில்லை. ஒப்புக்கொள்கிறோம். இதற்காகத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என சாம்சங்கின் துணைத் தலைவர் கிம் கி-நம் என கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க சம்மதித்தது. அறிவித்தபடியே பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் வழங்க சாம்சங் முன்வந்துள்ளது.