நாடாளுமன்றத்தில் பலரும் முகம் சுழிக்கும் படி சுமந்திரன் செய்த காரியம்!! தடுமாறிய ரணில்..

கடந்த சில வாரங்களாக இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் பாரியதொரு அரசியல் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த அணிக்கு பாரிய தோல்வியும், ரணில் தரப்புக்கு வெற்றியும் கிடைத்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாகவும், சபாநாயகர் மற்றும் அனுர ஆகியோரே இதற்கு முக்கிய காரணம் என்றும் பரவலாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் சபாநாயகர் கரு ஜெயசூரிய உரையாற்றும் போது, சுமந்திரன் எழுந்து மிகவும் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார்.

இதில், உரையாற்றுவதற்கு தயாராக இருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கடும் கோபத்துடன் சுமந்திரன் எழுந்து வந்தார்.

ரணிலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த லக்ஸ்மன் கிரியெல்லவிடம் சுமந்திரன் வந்து, வாக்கெடுப்பினை குரல் பதிவு மூலம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதற்கு அவசியமில்லை என சபாநாயகர் தெரிவித்த நிலையில், சுமந்திரனும் அதை ஏற்றுச்சென்றுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுமந்திரன் நடந்து கொண்ட விதம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் செயற்பட்ட விதம் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 14 பேருக்கு பெருமையானதாக இருக்கலாம் மக்களின் ஏக பிரநிதிகளுக்கு முகம் சுழிக்கும் விடயமாகவே கருதப்படுகின்றது.

முதல்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்லவிடம் பேசிய விதம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றம் மீயூயர் சட்டவாக்க சபையாக காணப்படுகின்றது. ஒழுக்கம், பண்பாடு மற்றும் நாகரீகம் நிறைந்த நாடாளுமன்றத்தில் ஒழுக்கத்தை பற்றி அதிகம் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதா என்றும் பலர் விமர்சணங்களை முன்வைத்துள்ளனர்.

சுமந்திரனின் இந்த செயல் அண்மையில் நாடாளுமன்றில் மிளகாய் தூள் கொண்டு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவின் செயற்பாடுக்கு நிகரானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக செயற்பட முயற்சிப்பதாக அண்மையில் கூறப்பட்டிருந்த நிலையில் அதனை நிரூபிக்கும் வண்ணம் அவரின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது.

இதேவேளை, இவர் எழுந்து வந்து பேசும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் மனைவியை இழந்து கவலையில் இருப்பது போல தடுமாற்றத்தில் கண்ணத்தில் வைத்த படி பேசுகின்றார்.

அது மட்டும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவர் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் தடுமாறுகின்றார்.

மேலும், நேற்று முன்தினம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் அவரின் டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.