இலங்கையில் 80 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை கொண்டுள்ள வர்த்தகரான ரொஹான் பல்லேவத்த எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய சமூக ஜனநாயக கட்சி இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாக தெரியவருகிறது.
ஏற்கனவே அவர் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொது தேர்தல் தொடர்பில் கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு மட்டத்தினருடன் கலந்துரையாடல் நடத்தி வருகின்றனர்.