மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப்படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் வெல்லாவெளியில் அமைந்துள்ள அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பொதுச் சுடரை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ் ஏற்றி வைத்துள்ளார்.

இதில் 100 மாவீரர்களின் புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டு அந்த அந்த மாவீரர்களின் பெற்றோர்களால் அர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகளும் சூட்டப்பட்டன.

பின்னர் மாவீரர்களின் பெற்றோருக்கு உணவழிக்கப்பட்டு அவர்களது பிள்ளைகளின் படங்களும், கமுகம் கன்றுகளும், வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பெற்றோர் தமது பிள்ளைகளின் புகைப்படங்களைப் பார்த்து கண்ணீர் விட்டழுது புலம்பியுள்ளனர்.

மட்டு, அம்பாறை மாவட்டத்திற்கான எமது காரியாலயத்தில் வைத்து 100 மாணவீரர்களின் புகைப்படங்கள் இன்று நமது கட்சியினால் அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக மாவீரர் குடும்பங்கள் தங்கின் வீரப் பதல்வர்களின் படங்களைத் தவற விட்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில்தான் 100 முதற் கட்டமாக மாவீரர்களின் பெற்றோர்கள் இங்கு வரவழைக்கப்பட்டு அவர்களது பிள்ளைகளின் படங்களை வழங்கியிருக்கின்றோம்.

மாவீரர் தினம் நினைவிற் கொள்ளப்படும் இந்த மாத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுவதில் நாம் திருத்திகடைகின்றோம் என இதன்போது கலந்து கொண்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி, அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.வினோராஜ், சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன், மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.