இந்தியாவுக்கு அருகே காணப்படும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகாமையில் உள்ள சிறிய தீவு ஒன்றில் வசித்து வரும் மனிதர்கள். 3,000 ஆண்டுகளாக வேளி உலக மனிதர்களோடு தொடர்பு கொள்ளாமல் குறித்த தீவில் வாழ்ந்து வருவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 6 இடங்களில் மாத்திரமே இவ்வாறான மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் மிகவும் மூத்த குடிகளாக இந்த தீவு மனிதர்கள் கருதப்படுகிறார்கள். சென்டினலீஸ் என்று அழைக்கப்படும் இம் மனிதர்கள். சென்டினலீஸ்(Sentinelese) Source: https://en.wikipedia.org/wiki/Sentinelese என்னும் பழமையான மொழி ஒன்றை பேசி வருகிறார்கள். இதுவரை அதனை எவரும் அறிந்தது இல்லை என்பது ஒரு புறம் இருக்க.
சமீபத்தில் இந்திய அரசின் அனுமதி இல்லாமல் அமெரிக்க இளைஞர் ஒருவர் இந்த தீவுக்கு சென்றுள்ளார். அவரை ஆதிவாசிகள் அம்புகளால் தாக்கி கொன்றுவிட்டார்கள். இதனை நேரடியாக படகோட்டி பார்த்துள்ளதோடு. முதல் முறையாக புகைப்படங்களையும் எடுத்துள்ளார். இந்திய மத்திய அரசு குறித்த தீவை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளது. இதனால் அங்கே எவரும் செல்வது இல்லை. அதுபோக குறித்த ஆதிவாசிகள் பாவிக்கும் அம்பில் நச்சு தன்மை உள்ளது என்று கூறப்படுகிறது. 2018ம் ஆண்டு அமெரிக்கர் இறந்தது போக 2006ம் ஆண்டு இந்த தீவுக்கு திசை தெரியாமல் தடுமாறிச் சென்ற 2 இந்திய மீனவர்களையும் இந்த ஆதிவாசிகள் இதேபோல அம்பால் கொன்றுள்ளார்கள்.
இவர்களை பொறுத்தவரை நவீன மனிதர்கள் சாத்தான்கள் தான். அவர்களை இந்த ஆதிவாசிகளுக்கு கண்டால் ஆகாது. இவர்கள் பேசிவரும் மொழி, இவர்களின் கலாச்சாரம் என்பனவற்றை இதுவரை காலமும் ஆராய இந்திய அரசு முற்படவில்லை. ஆனால் இந்த ஆதிவாசிகள் 50 தொடக்கம் 200 பேர் வரையே மிஞ்சியுள்ளதாக இந்திய அரசு அறிந்து வைத்துள்ளது. இவர்களை ஏன் இந்திய அரசு மிகவும் பலமாக பாதுகாத்து வருகிறது என்பதில் பெரும் சந்தேகம் உள்ளது என்கிறார்கள். காரணம் இந்த மனிதர்கள் இந்தியர்கள் அல்ல. இவர்களை பார்த்தால் ஆபிரிக்க நாட்டவர்கள் போல இருக்கிறார்கள். இந்தனை ஆயிரம் வருடங்களாக ஒரு தீவில் வாழும் இவர்கள் எந்த ஒரு நோய்க்கும் ஆளாகவில்லை. இவர்கள் அழிந்து போகவும் இல்லை. அப்படி என்றால் இவர்கள் யார் ?
மிக மிக நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மனிதர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய அரசு இவர்களை பாதுகாத்து வருகிறது. இவர்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றவும். கிறிஸ்தவ மதம் பற்றி போதிக்கவுமே இந்த அமெரிக்க இளைஞர் களவாக படகில் ஏறி குறித்த தீவுக்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டாலும். இதன் பின்னணியில் பெரும் விடையம் உள்ளது என்று கூறப்படுகிறது. குறித்த மனிதர்களில் ஒருவரைப் பிடித்து. அவரது ரத்தத்தை எடுத்து பல பரிசோதனைகளை நிகழ்த்த அமெரிக்க கம்பெனி ஒன்று, இவ்வாறு இளைஞரை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் இந்திய தீவில் ஆபிரிக்க மக்கள் ! அதிலும் வேற்று மொழி பேசும் மக்கள் … அவர்கள் பாதி இந்தியர்கள். அது போக தமிழ் நாட்டுக்கு அருகே உள்ள தீவு. இவ்வாறு பல மர்மங்கள் இங்கே புதைந்து கிடக்கிறது.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தில் இருந்தே ஆபிரிக்க நாடுகளுக்கு ஒரு வகையான இந்தியர்கள் சென்றார்கள் என்றும். பின்னர் அவர்களில் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று. பல்லாயிரம் வருடங்களாகிய நிலையில். அவர்கள் சூழலுக்கு ஏற்ப்ப வெள்ளை, கறுப்பு இன மக்களாக உருப்பெற்றதாக ஒரு கூற்று உள்ளது. இதற்க்கும் இந்த தீவுகளுக்கும் தொடர்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.