வெளிநாடுகளால் துக்கி எறியப்பட்ட இவர்கள்..

ஒரு மாதம் ஆகியும், மஹிந்த ராஜபக்சவின் புதிய அரசாங்கத்துக்கு வெளிநாடுகள் இன்னும் அங்கீகாரம் வழங்காமை தொடர்பில் அரசாங்க மட்டத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ரணில் பதவி விலக்கப்பட்டு மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் சீனாவின் தூதுவர் நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனையடுத்து பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகரும் மஹிந்தவை சந்தித்திருந்தார். எனினும் இந்த நாடுகளின் தலைவர்கள் இன்னமும் மஹிந்தவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை.

இந்தியாவை பொறுத்தவரை இந்த பிரச்சினையை இலங்கையே தீர்த்துக்கொள்ளட்டும் என்ற போக்கில் விட்டுவிட்டது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.