சென்னை மெரினா கடற்கரையில் 23ஆம் தேதி முதல் அலையில் இருந்து நுரை வெளியே தள்ளப்பட்டு, கடற்கரை முழுவதும் பரவி கிடக்கிறது.
இதனால் அங்கு செல்வோர் அச்சப்பட்டு கடற்கரை அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று கடலை பார்வையிட்டு செல்கின்றனர்.
இதுபோன்ற நுரை வருவதற்கு காரணம், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் கழிவு நீர், ஆர்ப்பரிக்கும் அலைகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், கடலுக்கு உள்ளே செல்லாமல் கரைக்கு அருகிலேயே அலைகளில் சுழன்று கொண்டு கிடந்தது. இந்த கழிவு நீருடன் தற்போது பெய்த மழை நீரும் அதிகளவு கலந்தது. இதில் இருந்து ஒரு விதமான நுரை வெளியேறி வருகிறது.
இவை அலையின் வேகத்தில் கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் தள்ளப்படுகிறது. இதனால் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இவை ஒரு சில நாட்கள் இருக்கும். பின்னர் சரியாகி விடும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.