அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கம் சார்பில் கட்டுநர் தின விழா, கோவை கலிக்கநாயக்கன்பாளையம் ஆர்.ஆர்.தோரண மஹாலில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்க தலைவர் புகழேந்தி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நடிகையும் சமூக சிந்தனையாளருமான கஸ்தூரி மற்றும் முன்னால் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி கலந்து சிறப்புரையாற்றினர். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சங்கத்தின் துணைத்தலைவர் திரிசங்கு நன்றி தெரிவித்தார்.
இவ்விழாவில் கோவை மாவட்ட அகில இந்தி கட்டுநர் வல்லுனர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பரமேஸ்வரன், விழாக்குழு தலைவர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நடிகை கஸ்தூரி ஆவேசம்
பின்னர் நடிகை கஸ்தூரி அளித்த பேட்டி:
தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நேரில் சென்று நிவாரணப்பெருட்களை கொடுத்து வந்தேன். முத்துப்பேட்டை, மன்னார்குடி, தில்லை வளாகம், உள்ளிட்ட பகுதிகளிலும் நாகப்பட்டினம் சாலையோர முகாம்களில் தங்கியுள்ள மக்க்களுக்கும் என்னால் முடிந்த பொருட்களை கொடுத்துள்ளேன். மக்கள் அனைத்தையும் இழந்து தெருக்களில் தனித்தனியாக நிற்கின்றனர். இந்த நிலையிலும் நிவாரப்பொருட்கள் பெறுவதிலும் வேறுபாடுகள் உண்டு. இறுதியாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்டைகிறன்றன.
சாலையில் சுலபமாக செல்லக்கூடிய இடங்களில் மட்டும் சென்று நிவாரணப் பொருட்களை கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், இன்னும் வாகன வசதி இல்லாத இடங்களுக்கும் சென்று பொருட்களை தர வேண்டும். நிறைய கிராமங்களுக்கு இதுவரையில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பல கிராமங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. இன்னும் ஒரு மாதத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முடிவடைய உள்ளது. இதனால் மிகவும் குறைவான விலையில் குடிநீர் பாட்டில்கள் வாங்கி அங்கு ஒரு பெரிய கட்சி அலுவலகத்தில் அடுக்கி வைத்துள்ளனர். பொன் விலையும் பூமியான டெல்டா மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து விடும். இதை அப்புறப்படுத்த அரசு தனி திட்டம் வகுக்க வேண்டும். நிறைய ஆர்வலர்கள் முன் வந்து நிவாரண பொருட்கள் கொடுத்து வருகின்றனர்.
அங்கு உள்ள மக்களின் தேவையை அறிந்து பொருட்களை கொடுத்து உதவுங்கள். இப்போதைய தேவையே மக்கள் தங்குமிடத்துக்கான தார்ப்பாய், மெழுவர்த்தி, போர்வைகள், பாய்கள், நல்ல கால்மிதிகள் இவைகளை மக்களிடம் கொடுங்கள்.
டப்பிங் சங்கத்தில் இருந்து பாடகி சின்மையியை நீக்கியது தவறு. அப்படியானால் வைரமுத்து குற்றவாளி என அவர்களே வாக்குமூலம் தருகிறார்களா? சின்மையியை நீக்கியது முட்டாள் தனம். வைரமுத்து மீது மதிப்பும் மறியாதையும் நான் வைத்து உள்ளேன். நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்கிறேன் என்றதும் முதலில் எனக்கு பாராட்டும் உதவியும் செய்தவர் வைரமுத்து .
ஆசை, அரசியல் குறிக்கோள் என்று எதுவும் இல்லை. இன்றைய அரசு அனைத்தையும் சரியாக செய்து விட்டால் நாம் அனைவரும் வீட்டில் அமைதியாக டிவி பார்த்துக் கொண்டு இருப்போம். அரசு சற்று மெதுவாக இயங்குவதால் வேகமாக இருக்கும் சிலர் வெளியில் தெரிகிறார்கள். இந்த அரசுக்கு கட்டுப்பட்ட சாதாரன தமிழச்சியாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன்.
இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.