வெளிநாட்டு பெண்ணை உருகி உருகி காதலித்த இந்தியர்: இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த இந்தியர் இந்து முறைப்படி சொந்த ஊரில் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரை சேர்ந்தவர் லோகேஷ் பாபு. லோகேஷ் அவுஸ்திரேலியாவில் தங்கி படித்து வந்த நிலையில் தொழில்முறை பணி காரணமாக பிரான்ஸுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள இஸ்கான் கோவிலில் பணிபுரியும் கந்தர்விகா என்ற பெண்ணை பார்த்துள்ளார்.

இருவரும் நட்பான பின்னர் சில காலத்தில் காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலுக்கு குடும்பத்தார் சம்மதிப்பார்களா என முதலில் இருவரும் பயந்தனர்.

ஆனால் லோகேஷ் மற்றும் கந்தர்விகாவின் குடும்பத்தார் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள்.

இதன் பின்னர் சமீபத்தில் சொந்த ஊரில் தனது காதலியை கரம் பிடித்தார் லோகேஷ். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

ஐரோப்பிய நாட்டை சேர்ந்த கந்தர்விகா இந்து வாழ்க்கை முறையை பின்பற்றியது தன்னை ஈர்த்தோடு, அவரை உயிருக்கு உயிராக நேசிக்க வைத்தது என லோகேஷ் கூறியுள்ளார்.