என்னை மட்டும் தனிமைப்படுத்துகின்றனர்! மீண்டும் சின்மயி புகார்

2 ஆண்டுகளாக சந்தா கட்டாத காரணத்தால் டப்பிங் யூனியனில் தன்னை நீக்கிவிட்டதாக பாடகி சின்மயி தெரிவித்திருந்தார்.

இதனால், நீக்கியதை எதிர்த்து சின்மயி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டப்பிங் யூனியன் மீது மீண்டும் புகார் கூறி டுவிட்டரில் சின்மயி கூறியிருப்பதாவது:-

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் 95 பேர் சந்தா செலுத்தாமல் உள்ளனர். 2016-ல் இருந்து இந்த கட்டணத்தை அவர்கள் செலுத்தவில்லை. ஆனால் என்னை மட்டும் தனிமைப்படுத்தி சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.

நான் 2016 பிப்ரவரி மாதம் எனது ஆயுட்கால சந்தா தொகையை வங்கி மூலம் செலுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.