இந்தியாவில் காதலனுடன் இரண்டாவது மனைவி ஓட்டம் பிடித்த நிலையில் கணவன் தனது முதல் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹனுமந்துலு (32). இவரின் முதல் மனைவி பெயர் சந்திரகலா (28). தம்பதிக்கு மஞ்சுளா (8) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரகலாவின் சகோதரி சுஜாதாவை ஹனுமந்துலு இரண்டாவதாக திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சில காலமாக சுஜாதாவுக்கு, வேறு நபருடன் தொடர்பு இருந்துவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்த நபருடன் சுஜாதா ஓடி போனார்.
இது குறித்து ஹனிமந்துலு பொலிஸ் புகார் அளித்த நிலையில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஹனுமந்துலு, நேற்று காலை முதல் மனைவி சந்திரகலா மற்றும் மகள் மஞ்சுளாவுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய நிலையில், ஹனுமந்துலு எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், சுஜாதா, சாய், வெங்கடேஷ், கிட்டு ஆகிய நால்வரும் தான் தனது மரணத்துக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.
இதோடு பொலிசார் சுஜாதாவை தேடுவதில் சரியாக செயல்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் நால்வரையும் தேடி வருகிறார்கள்.