எலும்புகளின் வலிமை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்??

உடலில் உள்ள எலும்புகளின் வலுமையை அதிகரிக்க கால்சியம் சத்துக்கள் மிகவும் அவசியமாகும்.

இந்த கால்சியம் சத்துக்கள் நம் உடம்பில் குறைந்து விட்டால், எலும்புகள் பலவீனம் அடைவதோடு, ரத்த செல்களின் உருவாக்கத்திலும் பல பிரச்னைகள் ஏற்படும்.

அத்தகைய எலும்புகளை தேய்மானம் அடையாமல் பலப்படுத்த உதவும் முக்கிய உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

பால்

கால்சியம் நிறைந்த பொருளான பாலை பெரியவர்கள் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் மற்றும் டீன்-ஏஜ் வயதினர் இன்னும் அதிகமான அளவில் பாலைக் குடித்தால் எலும்புகள் வலுபெறும்.

தயிர்

தயிரில் எலும்புகளை வலிமையாக்கும் சத்துக்களான வைட்டமின் பி6, 12, கால்சியம் மற்றும் புரோட்டீன்களும் அடங்கியுள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரை சாப்பிடுவது நலம் பெயர்க்கும்.

எள்ளு விதைகள்

மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்களான பி1, கே மற்றும் டி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் எள்ளு விதைகளில் அடங்கியுள்ளது. மேலும் எள்ளு விதைகளில் எலும்புகளின் அடர்த்திக்கு தேவையான ஜிங்க் சத்தும் அடங்கியுள்ளது.

வெள்ளை பீன்ஸ்

வெள்ளை பீன்ஸில் எலும்புகளை இறுக்கும் கால்சியம் மட்டுமின்றி, வளமான அளவில் புரோட்டீன், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் சத்துக்களும் அடங்கியுள்ளது.

ஈரல்

ஈரவில் வைட்டமின் ஏ, டி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ ஈறு நோய்களைத் தடுக்கும். அதேப்போல் வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கும்.

மத்தி மீன்

மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் டி போன்ற எலும்புகளை வலிமையாக்கும் சத்துக்கள் உள்ளது. ஆகவே எலும்புகளை வலிமையாக்க நினைத்தால மத்தி மீன்களை அடிக்கடி சாப்பிடலாம்.

கொலார்டு கீரை

கொலார்டு கீரைகளில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் கே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம் போன்றவை உள்ளன.இதோடு நார்ச்சத்து, வைட்டமின் டி மற்றும் ஏ போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் போன்றவைகளும் உள்ளது. இவை அனைத்துமே எலும்புகளை வலிமையாக்கும்.