புலிகளின் சின்னங்கள்.கொடிகள் மற்றும் பாடல்களுக்கு தடை!

மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள். கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவீரர் நினைவு தின அனுஷ்டிப்பின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள். கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (26)  மாலை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்

கொக்கட்டிச் சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிமுன்மாரி, மாவீரர் துயிலும் இல்லத்தில்  நினைவு தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த மாவீரர் துயிலுமில்லம்  அரச காணியில் அமைந்திருப்பதாகவும்  அங்கு நினைவு கல் நாட்டுவதாகவும் விடுதலைப்  புலிகளின் கொடிகள், பாடல்கள்  பாவிக்க முனைந்துவருவதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த மாவீரர் அனுஷ;டிப்பை தடைசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்; இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸார் வழக்க தாக்குதல் செய்தனர்.

இந்த வழக்கை எடுத்துக்கொண்ட நீதவான் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அனுஷ்டிப்பதற்கு எந்தத் தடையுமில்லை அதேவேளை விடுதலைப் புலிகளின் சின்னங்கள் மற்றும் கொடிகள் பாடல்கள் பயன்படுத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  தடைவிதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவு தினம் அனுஷ்டிப்பிற்காகச் செயற்பட்டு வந்தவர்களை பொலிஸார் அழைத்து விபரங்களை எடுத்துக் கொண்டதுடன் புலிகளின் சின்னங்கள் மற்றும் கொடிகள் போன்றவற்றைப் பாவிக்க கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது