பிரித்தானியாவின் பிரபல சூப்பர்மார்க்கெட் ஒன்று தனது கடைகளில் விற்பகப்பட்ட சிக்கன், கொடிய உயிர்க்கொல்லி பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை உண்ண வேண்டாம் என்றும், குழந்தைகளோ வயது முதிர்ந்தவர்களோ அதை உண்டால் உயிரிழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவின் பிரபல சூப்பர்மார்க்கெட்டான Nisa தனது சிக்கன் பிரெஸ்ட்களை, அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தின்பேரில் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
அந்த சிக்கனை எந்த திகதிக்குள் பயன்படுத்தலாம் என ஸ்டிக்கர் ஒட்டுவதில் ஏற்பட்ட குழப்பம் தற்போது இவ்வளவு பெரிய பிரச்சினையில் முடிந்துள்ளது. அந்த சிக்கன் கேம்பைலோபாக்டர் என்னும் கொடிய நோய்க்கிருமியால் பாதிக்கப்படிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கேம்பைலோபாக்டர் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு தரக்கட்டுப்பாட்டு ஏஜன்சி, அந்த சிக்கனை வாங்கியவர்களுக்கு, அது பாதுகாப்பற்றது என்னும் செய்தியை தெரிவித்துள்ளது.
யாராவது அந்த சிக்கனை வாங்கியிருந்தால் அதை உண்ன வேண்டாம் என்றும், அதை எந்த கடையில் வாங்கினீர்களோ அங்கேயே திருப்பிக் கொடுத்து அதற்கான முழுத்தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.