ஆதிவாசிகளால் கொல்லப்பட்ட இளைஞர்: குடும்பத்தார் வெளியிட்ட உருக்கமான பதிவு

அந்தமானில் அமெரிக்க இளைஞர் கொல்லப்பட்ட நிலையில் அவர் குடும்பத்தார் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர்.

அந்தமானில் உள்ள வடக்கு செண்டினல் தீவுக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் என்பவர் அங்கு வாழும் ஆதிவாசிகளால் அம்பு எய்தி கொலை செய்யப்பட்டார்.

அவரின் சடலத்தை கைப்பற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜான் ஆலன் குடும்பத்தார் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், இந்தியாவில் ஜான் சமீபத்தில் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்தோம்.

இதன் காரணமாக நாங்கள் அடைந்துள்ள துயரத்துக்கு அளவேயில்லை. ஜான் அன்பான மகனாக, சகோதரனாக, நண்பனாக திகழ்ந்தவர்.

அவர் மற்றவர்களுக்கு வேண்டுமானால் கிறிஸ்துவ மிஷினரி, சர்வதேச கால்பந்து பயிற்சியாளர், மலை ஏறுபவராக இருக்கலாம்.

அவர் கடவுளை நேசித்தார், இல்லாதவர்களுக்கு உதவினார்.

ஜான் இறப்புக்கு காரணமானவர்களை நாங்கள் மன்னிக்கிறோம். அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை இந்த நேரத்தில் தரும்படி கேட்டு கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.