மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட புலம்பெயர்வோர் அமெரிக்க பொலிசாரால் துரத்தியடிக்கப்பட்டனர்.
San Ysidro Port பகுதியில் குழுமியுள்ள மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்வோருக்கும் எல்லை அதிகாரிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
சிலர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலி ஒன்றில் திறப்பு ஒன்றை ஏற்படுத்தி அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டபோது, எல்லை அதிகாரிகள் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளாலும் சுட்டனர்.
இதனால் சிறுபிள்ளைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் கூச்சலிடவும், பயங்கரமாக இருமவும் தொடங்கினர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக Tijuanaவுக்கும் San Diegoவுக்கும் இடையிலான எல்லையை அதிகாரிகள் மூடவேண்டியதாயிற்று.
இதற்கிடையில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலரான Kirstjen Nielsen இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களை அனுமதிக்க இயலாது என்று தெரிவித்துள்ளதோடு அரசு சொத்துகளை சேதப்படுத்துவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் பத்திரிகைகள் எல்லையில் மக்கள் கண்ணீர் புகை குண்டுகளுக்கு தப்பி ஓடும் பரிதாகக் காட்சிகளை வெளியிட்டுள்ளன.