நிர்வாண வீடியோவால் எனது குழந்தைகளை பிரிந்தேன்…உலகம் என்னை நம்பவேண்டும்: ஒரு தாயின் பாசப்போராட்டம்

நிர்வாண வீடியோவில் தான் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதால் தனது பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெண், கடந்த இரண்டு வருடங்களாக தான் ஒரு குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க போராடி வருகிறார்.

கேரளாவின் தொடுபுழாவை சேர்ந்த சோபா சஜீ என்பவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பில் நிர்வாண வீடியோ ஒன்று பரவியது. அந்த வீடியோவில் சோபாவை சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவின் காரணத்தால் தனது குடும்பத்துக்குள் பிரச்சனையை எதிர்கொண்ட சோபா, தனது கணவனால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால் தனது 3 குழந்தைகளையும் பார்க்கமுடியாமல் இன்று வரை தவித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக தனக்கு நேர்ந்த இந்த அநியாயம் குறித்து வழக்கு தொடர்ந்து, இதனை பரப்பிய நபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடி வருகிறார்.

கேரளாவின் Centre for Development of Advanced Computing துறை, இந்த வீடியோவை சோதனை செய்து, அந்த வீடியோவில் இருக்கும் பெண் சோபா கிடையாது என உறுதி செய்துவிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து சோபா கூறியதாவது, இதுபோன்ற வீடியோவால் எனது முகம் ஊடகங்களுக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் நான் முகத்தை மூடிக்கொள்ளவில்லை.

என் மீது எவ்வித தவறும் இல்லை என்பதை நான் நிரூபிக்க விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்கு நான் தான் பொறுப்பு, இன்று வரை அவர்களை சந்திப்பதற்கு நான் போராட வேண்டியிருக்கிறது.

இந்த உலகம் என்னை நம்பவேண்டும், இதிலிருந்து நான் பின்வாங்கப்போவதில்லை, நான் தொடர்ந்து அந்த நபரை கண்டுபிடிப்பதில் போராடி, நீதி பெற்று தீருவேன் என கூறியுள்ளார்.