அவுஸ்திரேலியாவில் தரை இறங்கும் நேரத்தில் விமானி அசந்து தூங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அவுஸ்திரலேசியாவின் தாஸ்மானியாவிலுள்ள டிவாந்போர்ட் பகுதியிலிருந்து, 48கிமீ தொலைவில் உள்ள கிங் தீவிற்கு கடந்த 8ம் தேதியன்று பைபர் பிஏஏ -31 நவாஜோ என்ற விமானம் புறப்பட்டுள்ளது.
இரட்டை எஞ்சின்களை கொண்ட இந்த விமானம் 1975-ல் வடிவமைக்கப்பட்டது. சம்பவத்தன்று விமானத்தில் 9 பேர் பயணித்துள்ளனர்.
அந்த ஒரு நாளில் மட்டும் 7விமானங்கள் தீவிற்கு சென்றுள்ளது. அதில் ஒரு விமானம் மட்டும் இறங்க வேண்டிய தீவை தாண்டி 50கிமீ அதிகதூரம் பயணித்து பின்னர், 6.21 மணிக்கு தரையிறங்கியுள்ளது.
விமான கண்காணிப்பு தரவின்படி இதனை அறிந்து கொண்ட அதிகாரிகள், அந்த நேரத்தில் விமானி உறங்கிவிட்டாரா? என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இதனை தீவிரமான வழக்காக எடுத்துக்கொண்ட அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியக அதிகாரிகள், விரைவில் விசாரணை மேற்கொண்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழு அறிக்கையும் வெளியிட வேண்டும் என கூறியுள்ளனர்.
இது சம்மந்தமாக வோர்டெஸ் ஏர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கொலின் டக்கரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.