பிரித்தானியாவில் 32 வயது பெண் ஒருவர் தந்தை இறந்த துக்கம் தாளாமல் அதிகமான உணவு எடுத்துக்கொண்டு எடையை அதிகரித்துள்ள வினோதமான சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக வீட்டிலோ அல்லது உறவினர்களில் யாரேனும் ஒருவரோ இறந்தால், துக்கம் தாளாமல் உணவு சாப்பிடாமல் இருந்து தான் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் அதற்கு அப்படியே மாறாக பிரித்தானியாவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவின் டர்ஹாம் பகுதியை சேர்ந்த ஸ்டெஃப் சைக்ஸ் என்ற 24 வயது பெண், தன்னுடைய முன்னாள் காதலனுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்துள்ளார்.
அப்போது வந்த தந்தையர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய அப்பா ஆலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஸ்டெஃப், ‘பல வருடங்களாக நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்பது எனக்கு தெரியும்’.
‘அவை எல்லாவற்றிற்காகவும் மிகப்பெரிய நன்றி. இந்த உலகத்திலேயே சிறந்த தந்தை நீங்கள் தான்’ என அனுப்பியுள்ளார்.
அன்று இரவே 10 மணிக்கு திடீரென அவசரமாக போன் செய்த ஸ்டெஃப்பின் அம்மா கரேன், அப்பா இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டெஃப் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். அன்றுமுதல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்த ஸ்டெஃப், தினமும் உருளைகிழங்கு சிப்ஸ் சாப்பிட ஆரம்பித்துள்ளார்.
இதனால் ஒரு நாளைக்கு 5000 கலோரிகள் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக இரண்டு வருடங்கள் கழித்து ஸ்டெஃப்பின் உடல் எடை 160 கிலோவை தொட்டது. பின்னர் அவருடைய அம்மா கூறிய அறிவுரையின் பேரில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
உடல் எடை தற்போது குறைந்துவிட்டாலும், நீளமாக வளர்ந்த தோல் சுருங்காமல் அப்படியே நின்றுவிட்டது. அதனை நீக்க முடியாமல் தற்போது ஸ்டெஃப் பெரும் துயரத்தில் இருப்பதாகவும், அதற்கு உதவி கேட்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.