அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னுடைய உடன்பிறந்த சகோதரனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
இரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது, அமெரிக்க மற்றும் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
அப்படி மீறி திருமணம் செய்துகொண்டால், இந்த நாடுகளில் கிடைக்கும் தண்டனைகளை விட, மொன்டானா, நெவாடா, மிச்சிகன் மற்றும் ஐடஹோ ஆகிய நகரங்களில் அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அந்த வகையில், இரத்த சொந்தங்களில் மகளையே திருமணம் செய்து கொண்டு இறந்த Pladl – கேட்டி தம்பதி மற்றும் மகனை திருமணம் செய்துகொன்டு சிறையில் இருக்கும் மோனிகா மாரஸ் – கேலப் தம்பதியினருக்கு ஆதரவாக பெண் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா (பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தன்னுடைய சகோதரனை சந்தித்துள்ளார்.
திடீரென அவன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், அடிக்கடி தனிமையில் சந்திக்க விரும்பி தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதனை சகோதரனும் ஏற்க, வெளியில் தெரிந்தால் அசிங்கம் என நினைத்து இருவரும் அமெரிக்காவை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாத ஒரு நகரத்தில் குடியேறினர்.
சாதாரணமான ஒரு தம்பதியினரை போலவே இருவரும் ஒரு குழந்தையை பெற்று வாழக்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கிறிஸ்டினா, தன்னுடைய முகத்தை காட்டினால் சிறைத்தண்டனை கிடைக்கும் என நினைத்து வெளியில் காட்ட மறுப்பு தெரிவித்துள்ளார். இரத்த உறவு திருமணம் என்பது சட்டத்திற்கு எதிரானது என இருப்பதாலே பலரும் பயப்படுகின்றனர்.
அது சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றால், எங்களை போல அதிகமானோர் திருமணம் செய்துகொள்வார்கள் என கூறியுள்ளார்.
மேலும், இரத்த உறவில் காதலித்து வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி வருவதாகவும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இரத்த உறவில் திருமணம் செய்தால், அச்சுறுத்தக்கூடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.