பிரித்தானியாவில் உள்ள பூங்காவில் சடலமாக கிடந்த 14 வயது சிறுமியின் வழக்கில், 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பிரித்தானியாவின் வோல்வெர்ஹாம்டன் பகுதியில் உள்ள பூங்காவில், சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதை அப்பகுதி வழியாக சென்ற ஒருவர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில், சிறுமி 2 நாட்களாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், இறந்த பின்னர் சடலத்துடன் உறவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பூங்காவில் இறந்து கிடந்தது லிதுவேனியா நாட்டை பூர்விகமாக கொண்ட விக்டோரியா சோகோலோவா என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக 16 வயது சிறுவனை கைது செய்த பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நான்கு ஆண்கள் மற்றும் எட்டு பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்மந்தப்பட்ட சிறுவன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்தான்.
இதனையடுத்து வழக்கினை வியாழக்கிழமைக்கு மாற்றிய நீதிபதி, டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை, இறந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறி உத்தரவிட்டார்.