சமூக ஆர்வலரான பீம் ஆர்மியின் நிறுவனர் சந்திரசேகர் ஆஸாத் அயோத்திக்கு செல்ல உள்ளார்.
ராம ஜன்ம பூமி – பாபர் மசூதி வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜனவரி மாதம் ஒத்தி வைத்தது. அதற்கு இந்துத்வா அமைப்புக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அயோத்தியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற தர்மசபை கூட்டத்தில் அயோத்தியில் உடனடியாக ராமர் கோவில் கட்டுமனம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.
இது குறித்து சமூக ஆர்வலரும் பீம் ஆர்மி என்னும் அமைப்பின் நிறுவனருமன சந்திரசேகர் ஆஸாத், “அயோத்தியில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய தர்மசபை கூட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. இதனால் மதக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை எல்லாம் தெரிந்துக் கொண்டே இந்த கூட்டத்தை அரசு நிர்வாகம் அனுமதித்துள்ளது.
ஆகவே நான் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி அயோத்திக்கு செல்ல உள்ளேன். அந்த மாவட்ட நீதிபதியிடம் அந்த புத்தகதஹி கொடுத்து சட்டம் ஒழுங்கை காப்பது குறித்து நினைவு படுத்தப் போகிறேன். பாஜக மற்றும் சங்க அமைப்புக்கள் இணைந்து கலவரங்களை தூண்டி விட்டு அதன மூலம் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தங்களுக்கு ஆதாயம் தேட முயல்கின்றனர்.
பல ஊர்களின் பெயரை மாற்றி அமைக்கும் பாஜகவினர் அயோத்தியில் புத்த கலாசாரம் மிகுந்துள்ளதால் அந்த நகருக்கு சாகேத் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பாபா சாகேப் அம்பேத்கார் மறைந்த தினமான டிசம்பர் 6 பலராலும் மறக்கப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என நினைவு கோரப்படுகிறது. இது தலித்துகள் குறித்த வரலாற்றை மறக்க பாஜக செய்யும் மற்றொரு திட்டமாகும்.
அதே போல் காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பதாக பொய் கூறி வருகிறது. அந்தக் கட்சிக்கு நிஜமாகவே தலித்துகள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால் சகோதரி மாயாவதியை கூட்டணி தலைவியாக அறிவித்திருக்க வேண்டும்.” என கூறி உள்ளார்.
ஆனால் மாயாவதி சந்திரசேகர் ஆஸாத் உடன் நட்புறவுடன் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
சந்திரசேகர் ஆசாத் ஒரு பாஜகவின் ஏஜண்ட் என மாயாவதி கூறி உள்ளார். கடந்த வருடம் உத்திரப் பிரதேசத்தில் நடந்த கலவரங்களுக்கு பீம் ஆர்மி அமைப்பே காரணம் என பல முறை தெரிவித்துள்ளார்.