கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, அவரது பதவிக்கு மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கை ஒரு சட்டவிரோத செயல் என குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைத்தமை, இடைக்கால தடை உத்தரவின் பின்னர் நாடாளுமன்றம் கூட்டப்படாமை மற்றும் மஹிந்த தொடர்ந்து பிரதமர் பதவியில் செயற்படுகின்றமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் முன்னாள் இணைப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஊடக பிரிவின், முன்னாள் பிரதி இயக்குனரான ஓஷல ஹேரத் என்பவரே தனது சட்டத்தரணி ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு மூலம் ரணில் தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
சபாநாயகர் உட்பட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.