உடலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கிவிரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படியதொடங்கும்.
இந்தக் காரணத்தினால் தான் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து,ரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ரத்த குழாயில் கொழுப்பு படியாமல் இருக்க செய்ய வேண்டியவை
- தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்குகொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.
- இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.
- சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
- தக்காளியை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி ஜூஸை கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக செய்து குடித்து வந்தால் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
- மேலும் ரத்த ஓட்டம் சீராகி சருமம் ஜொலிக்கும். காலைச் சிற்றுண்டியுடன் பால், சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸை அளவாகத் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.
இதய இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்க செய்யப்படும் இயற்கை மருந்து
1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் புண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர் எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்.
நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன், சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து பாட்டலில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருந்துங்கள்.