டென்மார்க் நாட்டில் பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கும்போது குழந்தையில் இருந்து தொற்றிய நோய் காரணமாக மரணமடைந்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த விசித்திர நோயால் அவரது கணவரும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போது அதே விசித்திர நோயால் நீண்ட 10 ஆண்டுகள் கடும் அவதிக்கு உள்ளான குறித்த பெண்மணி மரணமடைந்துள்ளார்.
மட்டுமின்றி இவரது மகன் தற்போது 53 வயதாகும் நிலையில் தமது தந்தையும் தாயும் மரணத்திற்கு காரணமான அதே நோயால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விசித்திர நோய் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவர்கள், 20 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த தந்தையிடம் இருந்தே குறித்த நோய் மகனுக்கு தொற்றியதாகவும், அதே நோய் தான் அவரது மனைவியின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் உறுதி செய்துள்ளனர்.
நச்சுத்தன்மை கொண்ட புரதப் பொருட்களை ரத்தத்தில் கலந்து பின்னர் அவை ரசாயன மாற்றம் கண்டு மூளையில் தங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது பின்னர் மூளையின் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களால் CJD என அறியப்படும் இந்த விசித்திர நோய் ஒருவகை டிமென்ஷியா எனவும், இறுதி கட்டத்தில் மூளையின் செல்களை மொத்தமாக இது சேதப்படுத்தும் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
10 முதல் 15 விழுக்காடு மக்களுக்கு இந்த நோய் பரம்பரையாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் மில்லியன் மக்களில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.