அயர்லாந்தைச் சேர்ந்த 22 வயது பெண் தன்னுடைய நான்கு வயதில் உறவினரால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று கூறியதையடுத்து, அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அயர்லாந்தின் Dublin பகுதியைச் சேர்ந்தவர் Nicole Moran. 22 வயதான இவர் தன்னுடைய உறவினர் தன்னை பல முறை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
அதன் பின் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் Karl Walsh என்பவரின் உறவினரின் வீட்டிற்கு அவர் தங்கையுடன் விளையாட சென்றுள்ளார்.
சில நாட்கள் இரவு நேரங்களில் அவரின் வீட்டில் இவர் தங்கியுள்ளார். அப்படி இவருக்கு நான்கு வயது இருக்கும் போது, ஒரு நாள் இரவு அவர்களின் வீட்டில் தூங்கியுள்ளார்.
இதைக் கண்ட Karl Walsh அந்த சிறுமியிடம் அத்து மீறியுள்ளார். அப்போது அவர் கத்திய போது, அது எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
அந்த வயதில் எனக்கு என்ன அது சரியா என்பது கூட தெரியவில்லை, ஆனால் ஏதோ தவறு நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
ஆனால் அதை சொல்லத் தெரியவில்லை, இது போன்று அவர் என்னிடம் பல முறை அத்துமீறி நடந்துள்ளார் என்று Nicole Moran கூறியுள்ளார்.
தற்போது 22 வயதாகவும் இவரை 4 முதல் 11 வயது வரை அந்த உறவினர் தன்னுடைய மோசமான ஆசையை நிறைவேற்றியுள்ளான் என்று அந்த உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.