மாவீரர் துயிலுமில்லம் முன்பாக திடீரென்று பழுதாகிய இராணுவ வாகனம்!

தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாகவும் நினைவேந்தப்படவுள்ள நிலையில், துயிலுமில்லத்தின் முன்பாக சிறிலங்கா இராணுவத்தினரின் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

துயிலுமில்லத்தின் முன்பாகவுள்ள காணியொன்றில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுட்டிக்கப்படுவதற்காக தயாராகியுள்ள நிலையில் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் இராணுவத்தின் கவச வாகனம் ஒன்று துயிலுமில்லத்தின் முன்பாக நின்று பழுதானதாகவும் அதனை இராணுவத்தினர் சிரமத்தின் மத்தியில் தள்ளியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை ஏற்கனவே திட்டமிட்டதன்படி இன்று மாலை மாவீரர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றப்படும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.