மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள திடீர் உத்தரவு!!

அரச நிறுவனங்கள் எதற்குமே இப்பொதைக்கு எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளவேண்டாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல அமைச்சர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளார்.குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி,

“அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள் இப்போதைக்கு வேண்டாம். இது காபந்து அரசு என்பதை நினைவில் வையுங்கள்” என அறிவுறுத்தினார்.

இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இதே உத்தரவினை ஜனாதிபதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தகதாகும்.