“கோவிலுக்கு சென்ற இசைஞானி இளையராஜாவுக்கு ஏற்பட்ட நிலை!

தமிழகத்தில் கோவிலுக்கு சென்ற இசைஞானி இளையராஜாவின் காரை வழி மறித்து பொலிசார் இதற்கு மேல் செல்ல முடியாது என்று கூறியதால், அவர் உடனடியாக அந்த இடத்திலே இறங்கி நடந்து சென்றதால் அப்பகுதியில் இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கு அலைமோதியுள்ளனர்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் ஆறாம் நாளான அன்று அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் மதியவேளையில், கோவில் பக்கம் இருக்கிற அண்ணாசலை அருகே கார் ஒன்று வந்து நின்றுள்ளது.

உடனடியாக அந்த காரைக் கண்ட பொலிசார், இதற்கு மேல் கார் செல்லாது, வண்டியை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். காரின் டிரைவர் உள்ளே இருந்த இளையராஜாவைப் பற்றி கூறிய போதும், அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல், அது எல்லாம் முடியாது என்று கூறியுள்ளார்.

காரின் உள்ளே இருந்த ராஜாவோ, உடனடியாக காரை விட்டு இறங்கி அந்த இடத்திலே நடக்க ஆரம்பித்தார். பளிச்சென்று வெள்ளை உடை, வெள்ளை காலணி என அந்த தெருவில் ராஜா சென்றதைப் பார்த்த மக்கள் உடனடியாக அவர் அருகில் சென்று பேசியுள்ளனர்.

அவரும் தான் ஒரு பிரபலம் என்று காட்டிக் கொள்ளாமல், சாதரணமாக அவர்களிடம் பேசியுள்ளார். இதுவே வேறு யாராக இருந்தால், அந்த இடத்தை உண்டு, இல்லை என்று பண்ணிருப்பார்கள். ஆனால் இளையராஜாவாக இருந்ததால், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.