மெர்க்கல் இரட்டைப் பிறவி? ஒருவர் ரஷ்யாவில், மற்றொருவர் அமெரிக்காவில்!

ரஷ்ய தெருவில் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் உருவத்தில் சுற்றி திரிந்த இளம்பெண்ணை பொதுமக்கள் பலரும் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரஷ்யாவை சேர்ந்த வால்டிஸ்லாவ் பர்னாஷேவ் என்ற புகைப்படக்கலைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, யேகாட்டெரின்புர்க் பகுதியில் பலரையும் படம் எடுத்துள்ளார்.

அதன் பின்னர் தன்னுடைய அலுவலகத்தில் அமர்ந்து புகைப்படங்களை எடிட்டிங் செய்துகொண்டிருந்துள்ளார்.

அதில் ஒரு பெண் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் உருவத்தில் இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார்.

அந்த பெண்ணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நான் VOX பாப் எடிட்டிங் செய்துகொண்டிருந்தேன், அப்போது ​​இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்க்கலை போன்ற உருவத்தில் ஒரு இளம்பெண் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் மெர்க்கல் உருவம் போல தான் உணர்ந்தேன். நீங்கள் எப்படி? என கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த பெண்ணின் பெயர் அன்னா எனவும், அவருடைய முகவரி மற்றும் போன் நம்பர் குறித்த எந்த தகவலும் என்னிடம் இல்லை. யாரேனும் தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். நான் போட்டோஷூட் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் பலரும், ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், ஒருவர் மெர்க்கல் ஒரு இரட்டை பிறவி. மருத்துவமனையிலே பிரிக்கப்பட்டுள்ளார் எனவும் மற்றொருவர் மெர்க்கல் அமெரிக்காவிற்கு தத்துக்கொடுக்கப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி ரஷ்யாவில் தங்கிவிட்டார் என கருத்து பதிவிட்டுள்ளனர்.