பிரித்தானியாவில் ஆறு வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதித்த இளம்பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்ட் பகுதியில் குடியிருக்கும் 28 வயதான பவுலா டாஸ்-ரீஸ் என்பவரே குறித்த விவகாரத்தில் ஆதாயம் தேடியவர்.
இவரது காதலர் எனக் கூறப்படும் 53 வயதான ஆண்ட்ரூ பார்க்கர் என்பவரிடம் இருந்து குறித்த ஆபாச படங்கள் மற்றும் வீடியோவுக்காக சுமார் 64,000 பவுண்டுகள் பிரதிபலனாக பெற்றுள்ளார்.
இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட லூடன் கிரவுன் நீதிமன்றம் இருவருக்கும் சேர்த்து 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், பெண் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட அதி பயங்கரமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது குற்றத்தை டாஸ்-ரீஸ் ஒப்புக்கொண்டதுடன், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தமது காதலருக்கு விற்பனை செய்ததையும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டாஸ்-ரீஸ் மற்றும் ஆண்ட்ரூ ஆகிய இருவரும் இணையம் வாயிலாக அறிமுகமாகியுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் பாலியல் துஸ்பிரயோகம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அந்த சிறுவனை மீட்ட பொலிசார் சிகிச்சை மற்றும் உளவியல் தெரபி உள்ளிட்டவைகளை அளித்து வருகின்றனர்.
மேலும், டாஸ்-ரீஸ் இதுவரை கைப்பற்றியுள்ள 64,000 பவுண்டுகள் பணத்தை அவரிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.