சீனாவில் திருமணம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருக்கும் மணமகனை பார்த்து மணமகள் கதறி அழுதுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் கியுஸூ மாகாணத்தில், திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் இருவரும் தங்களுடைய புது வீட்டிற்கு செல்லும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு மணமகனுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என அவருடைய நண்பர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி உள்ளாடையுடன் வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த மணமகன் மீது நண்பர்கள் சிலர் மை அடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதிலிருந்து தப்ப முயன்ற மணமகன் சாலை வழியே ஓட முயற்சித்துள்ளார். அப்போது வேகமாக சாலையில் வந்துகொண்டிருந்த வாகனம் மோதி படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே மணமகன் சுருண்டு விழுந்தார்.
இதனை பார்த்து மணமகள் ஒருபுறம் கதறி அழுதுகொண்டிருக்க, வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மணப்பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.