திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த சண்முகம் மகன் ரவி(25) என்பவர் மெர்சியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து இன்று மாலை பஸ் நிலையம் எதிரே வந்த மெர்சியிடம் ரவி தன் காதலை சொல்லி தன்னையும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மெர்சி ரவியை காதலிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சி கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மெர்சி ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.