யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு தேசிய மாவீரர் நாளினை உணர்வுபூர்வமாக அனுட்டித்துள்ளனர்.
சரியாக மாலை ஆறு ஐந்து மணிக்கு மாவீரர்களுக்கான முதன்மை ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து தூபியினைச் சூழ்ந்திருந்த மாணவர்களும் மாணவிகளும் தீபமேற்றி மாவீரர்களை நினைவில் ஏந்தினர்.
இதன்போது மாவீரர் நினைவுப் பாடல் ஒலிக்கவிடப்பட்டதுடன் மாணவ மாணவியர் கண்ணீர் விட்டுக் கலங்கி அழுதனர்.
இதேவேளை இன்று மதியம் மாவீரர்களுக்கான மலர் வணக்க நிகழ்வும் யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.