பொதுவாக உடலில் நீர் பற்றாக்குறை போன்ற சில காரணமாக இரத்தத்தில் நீர் பிரியும் போது ஏற்படுவது தான் சிறுநீரக கல்.
சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் தாங்க முடியாத வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. அதோடு சிறுநீர் பாதையிலும் தடையை உண்டாக்குகிறது
இத்தகைய சிறுநீரக கற்கள் வராமல் இருப்பதற்கு என்ன வழி முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
சிறுநீரக கல் வராமல் தடுப்பது எப்படி?
- உடலுக்கு தேவையான அளவிற்கு தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தவும்.
- நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிகளவு சாப்பிடவும்.
- தினமும் உணவில் ஆடு இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.
- வாழை தண்டில் தாதுப்பு அதிகளவு நிறைந்துள்ளதால் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு அதிகளவு உதவுகிறது. எனவே தினமும் உணவில் அதிகளவு வாழைத்தண்டு சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
- சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸை அதிகளவு தினமும் அருந்தி வரவும்.
- முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும்.எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.
- பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். இதை வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.
- மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ளவும். உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.