காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு!

நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று இரவு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முகத்துவாரப் பிரதேசத்தில் சடலமாக்க மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்தபோது காணாமல் போயிருந்த 8 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் சடலமாக்க கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் 01ம் பிரிவில் 196/A வன்னியார் வீதியை அண்டி வசிக்கும் மன்சூர் அய்மன் அப்துல்லாஹ் (வயது 8) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி நிலையில் மரணித்தவராகும்.

காணாமல் போயிருந்த சிறுவனைத் தேடும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது  நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நிந்தவூர் முகத்துவார பிரதேசத்தில்  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.