மாதுளம் பழத்தில் அதிக அளவில் பிளேவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
ஒரு கப் மாதுளம்பழக்கொட்டையில், நார்ச்சத்து 7 கிராம், புரோட்டின் 3 கிராம், விட்டமின் சி 30 சதவீதம், விட்டமின் கே 36 சதவீதம், போலேட் 16 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 12 சதவீதம் உள்ளது.
எதற்காக இதை தினமும் சாப்பிட வேண்டும்?
- உடல் இன்சுலினை உற்பத்தி செய்யாத நிலையில் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும்விதத்தில் உடலால் பயன்படுத்த முடியாத நிலைதான் சர்க்கரைநோய் எனப்படுகிறது.
- சர்க்கரை நோய் வராமல் தடுக்க நாம் சில ஆரோக்கியமான உணவு வகைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்வதுடன் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
- மேலும் மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால் உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகி இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். எனவே சர்க்கரை நோயளிகள் இதனை தினமும் உண்டு வருவது மிகவும் நல்லது.
நன்மைகள்
- தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.
- உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
- செரிமான பிரச்னைகள், வயிற்றுப் போக்கால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மாதுளம் பழச்சாறு கொடுக்கலாம் மாதுளையின் தோல் மற்றும் இலைகளும் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.
- வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.
- இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் காய்ச்சல், சளி பிரச்னைகளிலிருந்து குழந்தையை பாதுகாக்கிறது. மேலும் பல் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது.
- மாதுளையை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பதனால் கல்லீரல் செயல்பாடு மேம்படும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
- தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.
- இதில் வைட்டமின் பி நிறைந்துள்ளதால் குழந்தையின் நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.