உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி 2-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் கோஹ்லி உலகின் ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டுவதில் 83-வது இடத்தில் உள்ளார்.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை போர்பஸ் அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் விராட் கோஹ்லி முன்னணியில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கோஹ்லி விளையாட்டு மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்த ஆண்டில் மட்டும் அவர் ரூ.170 கோடி வருமானம் ஈட்டியுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்-ன் வருவாயை விட அதிகமாகும். பூமா, பெப்சி, ஆடி மற்றும் ஓக்லே போன்ற முன்னணி பிராண்டுகள் விளம்பர தூதரக கோஹ்லி உள்ளார்.
மேலும் விளையாட்டு உபகரணங்கள், வாட்ச், மோட்டார் பைக், துணி மணிகள், எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட விளம்பரங்களிலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.