15 வயது அகதி முகத்தில் தண்ணீர் கொட்டி இனவெறி தாக்குதல்: வீடியோ வெளியானது

பிரித்தானிய பள்ளிக்கூடத்தில் 15 வயது அகதி மீது இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Huddersfield நகரில் உள்ள Almondbury Community பள்ளிக்கூடத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

சிரியாவை சேர்ந்த 15 வயதான அகதி அங்கு படித்து வந்த நிலையில் உணவு இடைவெளியின் போது 16 வயதான மாணவன் அகதியிடம் வந்துள்ளான்.

பின்னர் அகதியை அடித்து கீழே தள்ளிய மாணவன், முகத்தின் மீது தண்ணீர் கொட்டியுள்ளான்.

இதை அங்கிருந்தவர்கள் யாரோ செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது. இதையடுத்து பொலிசார் அந்த 16 வயது மாணவனை கைது செய்துள்ளனர்.

இது ஒரு இனவெறி தாக்குதல் என பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் சிறுவனை விரைவில் பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இதனிடையில் பாதிக்கப்பட்ட 15 வயது அகதி சிறுவன் மற்றும் அவன் குடும்பத்துக்காக நிதியுதவி வசூலிக்கப்பட்டு வருகிறது.