மாவீரர் துயிலுமில்லத்தில் சிங்கள நபருக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் மக்கள்!

கடந்தகாலங்களில் தலைவர் பிரபாகரன் தலைமையில் தனி ஈழம் ஒன்றே தமிழ்மக்களுக்கான தீர்வு என தமிழீழம் கோரி பல ஆண்டுகள் தமிழ்மக்கள் போராடினர்.

இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு பல நாடுகள் இணைந்து, பல போர்க்குற்றங்களை அரங்கேற்றி தமிழ் மக்களின் போராட்டத்தை மௌனிக்க வைத்தது.

ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழர் போராட்டத்தில் உள்ள நியாயத்தன்மையை புரிந்து கொண்ட சில சிங்கள, மற்றும் முஸ்லீம் இளைஞர்களும் தமிழர்களின் போராட்டத்தில் இணைத்துக்கொண்டு தங்கள் உயிர்களை இழந்து மாவீரர்களானார்கள்.

அந்தவகையில் மூதூர் பகுதியை சேர்ந்த றணம் என அழைக்கப்படும் குஞ்சுபண்டா ரணசிங்கா என்ற சிங்கள நபர் கடந்த 04.10.1999-ம் ஆண்டு வீரச்சாவு அடைந்துள்ளார், இவருக்கும் கடந்த 27-ம் திகதி இடம்பெற்ற மாவீரர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.