உடலில் சர்க்கரையின் அளவு அதிகம்: வெளிபடுத்தும் அறிகுறிகள்

நாம் அன்றாடம் உணவுடன் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவை நமது உடம்பிற்க்கு தேவையான சக்தியாக மாற்றுவது தான் இன்சுலின் ஹார்மோன்.

அப்படி இருக்கும் இன்சுலினை நமது உடல் உற்பத்தி செய்யாத வகையில் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாமல் இருக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எனவே நமது உடம்பில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஆபத்தான அறிகுறிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

உயர் ரத்த அழுத்தம்

அன்றாடம் நாம் அதிகப்படியான சர்க்கரையை சாப்பிட்டால் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இல்லாமல் உயர் ரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் அதிக கொழுப்பு படிந்து அடைபடுதல், இருதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு

சர்க்கரையின் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் இல்லாததால், இதை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நமது உடலின் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்து, இன்சுலின் ஹார்மோன் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.

பசியின்மை

சர்க்கரை கலந்த உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது, அந்த உணவு வகைகளுக்கு மட்டுமே அடிமையாகும் உணர்வுகள் ஏற்படுகிறது. மற்ற ஆரோக்கியமான உணவுகள் மீதான ஆர்வம் குறைகிறது.

பற்கள் பிரச்சனை

சர்க்கரையில் உள்ள நுண்ணுயிர்கள் நமது பற்களின் எனாமலை அரித்து, சிறிய அளவிலான துளைகள், ஈறு பிரச்சனைகள் போன்ற பற்கள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

சோர்வு

சர்க்கரை கலந்த உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடுவதால், ஒருவித மந்த நிலைகள், சோர்வுத் தன்மை, மயக்கம் மற்றும் தலைச்சுற்றல், தூக்கமின்மை இது போன்ற உணர்வுகள் அதிகமாக ஏற்படுகிறது.

சரும பாதிப்புகள்

நமது சருமத்தின் நிறம் மாற்றம் அடைந்து, அலர்ஜி மற்றும் சொரசொரப்புத் தன்மை இது போன்ற சருமப் பிரச்சனைகளை அதிகமாக சந்திக்க நேரிடுகிறது.

மூளையில் பாதிப்பு

மூளையின் செயல்பாடுகள் சரியாக இருக்க, மூளையில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற வேண்டும். மேலும் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும். அடிக்கடி தூக்கம் வருவது, முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவது போன்றவை ஏற்ப்படும்.