இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர்கள் தான், இலங்கையில் உள்ள மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று அந்தணியின் பயிற்சியாளர் சந்திக ஹத்ருசிங்கா கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித போட்டிகளில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி ஒரு நாள் மற்றும் டி20 போட்டியை தொடர்ந்து டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
இந்நிலையில் இலங்கையின் அணியின் பயிற்சியாளர் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஹத்ருசிங்கா, இது போன்ற ஆடுகளங்களில் இரண்டு அணியின் பேட்ஸ்மேன்களுக்கும் கடினமானதாக இருக்கும்.
நான் முன்னரே கூறியதைப் போன்று, இரண்டாவது மற்றும் நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு அதிக சவால்களை இந்த ஆடுகளங்கள் கொடுத்திருக்கின்றன.
இருப்பினும் இலங்கை அணியின் பேட்டிங்கை பார்க்கும் போது, இந்த தொடரில் விளையாடிய வீரர்கள் தான் இலங்கை அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள், இவர்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்.
இதனால் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ள ஆடுகளங்களில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.