விஷப்பாம்புகளை காட்டி, இளம்பெண்ணை மிரட்டி உறவு கொண்ட இளைஞர்!.

சீன நாட்டில் கொடிய விஷப்பாம்பை காட்டி பயமூட்டி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் அதே பாம்பால் கொல்லப்பட்டுள்ளார் .

சீன நாட்டின் ஜியாங்க்ஸி மாகாணத்தில், ஹொட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து, கொடிய விஷப்பாம்புகளை காட்டி மிரட்டி, இளம்பெண்ணுடன் உறவு கொண்டுள்ளார்.

உறவுக்கு பின்னர் குளியலறைக்கு சென்ற அந்த இளைஞரை குளியல் அறையில் குளிக்கும்போது அவர் கொண்டுவந்த மூன்று விஷப்பாம்புகளில் ஒன்று கடித்துள்ளது.

ஆனால் பாம்பு கடித்தது தெரியாமல் அந்த இளைஞர் திரும்ப வந்து படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில் தூக்கத்திலேயே அந்த இளைஞர் மரணமடைந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

சம்பவம் நடந்த மறுநாள் பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஹொட்டலில் சோதனை செய்யவந்த அதிகாரிகள், இளைங்கரை மீட்டு பரிசோதனை செய்யும்போது அந்த இளைஞர் விஷப்பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

அங்கு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.