அடுத்தடுத்து பற்றி எரியும் காடுகள்., மக்கள் அவசர கதியில் வெளியேற்றம்.!!

ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலம் குயின்ஸ்லாந்து. இந்த பகுதியில் சென்ற 24 ம் தேதியன்று திடீரென காட்டுத்தீயானது பரவத் தொடங்கியது. இந்த காட்டுத்தீயானது அங்குள்ள சுமார் 22 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்புகள் அனைத்தும் தீயில் சிக்கி நாசமானது.

அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் அதிதீவிர காற்றின் காரணமாக தீயானது மளமளவென பரவி வருகிறது. தீயானது பரவி வரும் இடங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபட்டு., சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேலும் இந்த தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கூறி அறிவுறுத்தப்பட்டுள்ளது., இந்த தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் ஈடுபட்டு உள்ள நிலையில்., மோசமான வானிலை காரணமாக பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது.

இந்த தீவிபத்தில் தற்போது வரை யாரும் பலியானதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை., மேலும் இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவலும் வெளியாகவில்லை.