எனக்கு கிடைக்காத அவளை கொடூரமாக கொலை செய்தது ஏன்? அதிர்ச்சி வீடியோ!

திருநெல்வேலி மாவட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலி, தனக்கு கிடைக்காத காரணத்தால் அவளை கொலை செய்தேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரவீந்திரன் மற்றும் மெர்சி ஆகிய இருவரும் ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தபோது நட்பாக பழகியுள்ளனர்.

நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் தனக்கு வேலை பிடிக்காத காரணத்தால், ரவீந்திரன் வேலையை விட்டு நின்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பேருந்து நிலையத்திற்கு எதிரே ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மெர்சி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவரது காதலன் ரவீந்திரனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

பொலிசில் ரவீந்திரன் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் மெர்சியை தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தேன். அவளும் என்னை காதலித்தாள். எனக்கு வேலை பிடிக்காததால் திடீரென வேலையை விட்டு நின்று விட்டேன். அதன் பிறகு வேலைக்கு எதுவும் நான் செல்லவில்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தோம்.

கடந்த சில வாரங்களாக என்னுடன் பேசுவதை மெர்சி தவிர்த்து வந்தாள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மெர்சியை எனது வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். எனது அப்பா, அம்மாவிடம் அவளை அறிமுகம் செய்து வைத்தேன். அவர்களுக்கும் மெர்சியை பிடித்துவிட்டது. பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற மெர்சியிடம், திருமணத்தை பற்றி பேசினேன். ஆனால் அதற்கு அவள், எனக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை. நட்பாக பழகுவோம் என்றாள்.

நேற்று முன்தினம் மெர்சிக்கு போன் செய்து வெளியே அழைத்தேன்.

அவளும் வந்து நின்றாள். அவளிடம் மீண்டும் திருமணத்தை பற்றி பேசினேன். ஆனால் அவள், எப்போதும் போல நட்பாக பழகுவோம் என்று கூறி திருமணத்துக்கு மறுத்தாள்.

இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எனக்கு கிடைக்காத மெர்சி, வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில் நான் அவளை கத்தியால் குத்திக்கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.