வார்த்தைகளால் மகனை கொலை செய்த தாய்! காதலிக்காக மகன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவர் அங்குள்ள லட்சுமி சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வித்யா பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.பின் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், வித்யாவின் தாயாருக்கும், இசக்கிராஜாவின் தாயாருக்கும் இருவரும் காதலித்து தெரிய வந்தது. இதனையடுத்து இசக்கிராஜாவின் தயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர் மிகவும் மனமுடைந்துள்ளார்.

இந்த சூழலில் வழக்கம்போல் இசக்கிராஜா தான் வேலை பார்க்கும் லட்சுமி சூப்பர் மார்க்கட்டில் யாரும் எதிர்பாராமல் இருக்கும் நேரத்தில் முதல் மாடியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், இந்த தற்கொலை முயற்சி சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வேளச்சேரி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.