தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வந்தபிறகு, மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திகைத்து நின்றது. ஜியோ வந்த பிறகு ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டது.
ஜியோ நிறுவனம் வந்தபிறகு அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கிற்கு மாறினார்கள். பலர் ஜியோ சிம்கார்டை அவுட்கோயிங், இண்டர்நெட் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி கொண்டு, மற்ற நிறுவனங்களின் சிம்கார்டுகளை வெறும் இன்கமிங் அழைப்புக்கு மட்டும் பயன்படுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, மாதந்தோறும் ரூ.35க்கு ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தப்போவதாக வாடிக்கையாளர்களுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தது. இந்த தகவலை அறிந்த வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என செல்போன் ஆபரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, வாடிக்கையாளர்களின் சேவையை நிறுத்துவது குறித்து 72 மணி நேரங்களுக்கு முன் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து கூறுகையில் அவ்வாறு இன்கம்மிங் கால்கள் நிறுத்தப்பட்டால், அந்த சிம்கார்டுகளையும் ஜியோ நெட்வொர்க்கிற்கு மாற்ற தயாராக உள்ளோம் என கூறுகின்றனர்.