நடிகர் ராதாரவியின் கௌரவ பெயரை அம்பலமாக்கிய பாடகி சின்மயி…!

மீடூ வாயிலாக வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு தற்போது நடிகர் ராதாரவியுடன் பிரச்சனை தொடங்கியுள்ளது.

வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் புகாரை கண்டித்து நடிகர் ராதாரவி விமர்சனம் செய்து வந்தார்.

இறுதியில், டப்பிங் யூனியனில் இருந்து சின்மயியியை நீக்குவது வரை இந்த விவகாரம் சென்றது. இதனைத்தொடர்ந்து, நடிகர் ராதாரவிக்கும், பாடகி சின்மயியிக்கும் தற்போது விமர்சன மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், ராதாரவி தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்கிற டத்தோ பட்டம் பொய் என்று கோபமாக டுவிட் செய்துள்ளார் சின்மயி.

மலேசியாவில் வழங்கப்படும் டத்தோ பட்டம் கௌரவமிக்கதாக கருதப்படுகிறது. இந்திய அளவில் நடிகர்களில் ஷாருக்கானுக்கு இந்தப் ப‌ட்டம் வழங்கப்பட்டதாகச் சொல்லுவார்கள்.

இந்த நிலையில், சின்மயி மலேசிய நாட்டின் மெலேகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் இருப்பதாவது:

மதிப்பிற்குரிய சின்மயி ஸ்ரீபதா.

நான் ஏற்கெனவே, மெலாகா அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதன்படி திரு.ராதாரவி என்ற நடிகருக்கு அந்த மாநில அரசு எந்த விருதினையும் வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக் கானுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனெனில் ராதாரவி இந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

மெலாகா அரசின் முதல்வர் யாக் தவுன் ஹாஜி அடி பின்னிடம் இது குறித்து புகார் தெரிவித்து இதன் மீது நடவடிக்கையோ அல்லது தீர்வோ எட்டப்படும்.

இதைப் பற்றி எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.

தற்போது, இந்த கடிதத்தால் நடிகர் ராதாரவியுடன் மீண்டும் மோதலை ஆரம்பித்துள்ளார் சின்மயி.