பெற்றோர் இல்லாத சிறுமி திடீர் கர்ப்பம்!

தூத்துக்குடியில் 17 வயது சிறுமி கர்பமடைந்திருந்த வழக்கில் மகாலிங்கம் என்ற கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமி தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

10 வகுப்பு மட்டுமே படித்திருந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி நடந்தவை பற்றி சிறுமியிடம் விசாரித்தார். அதில், முத்தையாபுரத்தை சேர்ந்த சிவலிங்கம் (21) என்ற கொத்தனார் தன்னை மிரட்டி கற்பழித்ததாகவும், வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தூத்துக்குடி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் மகாலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.