திருப்பூரில் திருமணம் நடைபெறுவதற்கு 2 மணிநேரம் முன்பு தனது திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் மணமகள்.
மகாலட்சுமி என்ற 24 வயது பெண்ணுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த வைரமணி (27) என்பவர், மகாலட்சுமியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, பெண் கேட்டுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த மகாலட்சுமி, பின்னர் வரதட்சணை எதுவும் கேட்கக்கூடாது என தெரிவித்து, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்
இந்நிலையில், திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், 2 மணி நேரம் இருக்கும் போது மண்டபத்திற்கு வந்திருந்த வைரமணியின் உறவினர்களில் ஒருவர் மகாலட்சுமியிடம் வரதட்சணை குறித்து கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வைரமணியின் பெற்றோர், மகாலட்சுமியிடம் எடுத்துக்கூறியும், திருமணத்திற்கு அவர் சம்மதிக்கவில்லை.